Breaking News

இந்திய வான்படை சாகசம்.!மெரினாவில் உயிரிழந்தவர்களுக்கு தமிழக முதல்வர் நிவாரணம் அறிவிப்பு.

NEWS COVER
0
இந்திய வான்படை சாகசம்.!மெரினாவில் உயிரிழந்தவர்களுக்கு தமிழக முதல்வர் நிவாரணம் அறிவிப்பு
GET NEWS COVER

 சென்னை மெரினா கடற்கரையில் நேற்று  இந்திய விமான படையின்        ( IAF ) சாகச நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்த சாகச முயற்சியை கண்டு களிக்க நேற்று பொதுமக்கள் ஏராளமான அளவில் சென்னை மெரினா கடற்கரையில் திரண்டனர் இதனால் புறநகர் மற்றும் சென்னை மெட்ரோ ரயில் ஆகியவற்றில் மக்கள் கூட்டம் வழக்கத்திற்கு அதிகமாக நிரம்பி வழிந்தது மேலும் மெரினா கடற்கரையில் அதிக அளவு மக்கள் கூடியதாகும் கடும் மெடிசால் ஏற்பட்டது நேற்று சாகச நிகழ்ச்சி காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற்றதால் அங்கு பொதுமக்கள் அனைவரும் வெட்டவெளி வெயிலில் நின்று எப்படி சாகச நிகழ்ச்சியை கண்டு களித்துக் கொண்டிருந்தனர். அதன் பிறகு சாகச நிகழ்ச்சி முடிந்து மக்கள் கூட்டம் ஒட்டுமொத்தமாக கிளம்பும்போது கூட்ட நெரிசலில் சிக்கி வெயில் மற்றும் பல்வேறு மருத்துவ காரணங்களினால் பொதுமக்கள் பலர் மயங்கி விழுந்தனர்.

 இதில் தற்போது வரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று எதிர்பாராத அளவு பொதுமக்கள் அதிகமாக கூடியதால் நிகழ்ச்சி முடிந்து ஒட்டுமொத்தமாக அனைவரும் கிளம்பும்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெயில் காரணமாக உயிரிழந்த 5 பேர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து
வழங்குவதாகவும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்வதாகவும் அறிவித்துள்ளார்.



Tags: தமிழக செய்திகள்