"ஜன் சுராஜ்"− புதிய கட்சியை தொடங்கினார் பிரசாந்த் கிஷோர்...!
NEWS COVER
0
"ஜன் சுராஜ்"− புதிய கட்சியை தொடங்கினார் பிரசாந்த் கிஷோர்..!
GET NEWS COVER
பிரபல அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் ஜன் சுராஜ் என்ற புதிய அரசியல் கட்சியினை துவங்கி உள்ளார்.
பீகார் மாநிலம் பாட்னாவில் அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி அன்று தனது புதிய அரசியல் கட்சியான ஜன் சுராஜை தொடங்கினார். தனது கட்சி கொடியில் மகாத்மா காந்தி மற்றும் சட்ட மாமேதை டாக்டர் B.R. அம்பேத்கார் ஆகியோர் படங்களை வைத்து அறிமுகப்படுத்தியுள்ளார்.
மேலும் தனது புதிய அரசியல் கட்சியின் 5 கொள்கைகளையும் அறிவித்துள்ளார். தனது கட்சியின் செயல் தலைவராக மனோஜ் திவாரியை அறிவித்துள்ளார். இவர் முன்னாள் IFS அதிகாரி ஆவார். மேலும் அவரை கட்சியின் செயல் தலைவராக அறிவித்து அவர் தன்னை விடவும் புத்திசாலி எனவும் அவரை பாராட்டினார்.
கட்சியின் புதிய ஐந்து கொள்கைகள்
1) ஆட்சிக்கு வந்த 1 மணி நேரத்தில் மதுவிலக்கு ரத்து செய்வது அதன் மூலம் கிடைக்கும் வருவாயில் உலகத்தரம் வாய்ந்த கல்வி வசதிகளை ஏற்படுத்தி தருவது
2) 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களுக்கு மாதம் 2000 ரூபாய் ஓய்வூதியம்.
3) பீகாரில் உள்ள ஒவ்வொரு இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பு
4) மகளிர்க்கு 4% வட்டியில் தொழில் முதலீட்டு உதவித்தொகை
5) பீகாரில் விவசாயத்தினை இலாபகரமாக்குவது.
ஆகிய 5 கொள்கைகளை அறிவித்துள்ளார்.
மேலும் தனது கட்சியின் வேட்பாளர்களை மக்களே முடிவு செய்வார்கள் எனவும் அவர் அறிவித்துள்ளார்.
Tags: தேசிய செய்திகள்