Breaking News

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில செயலாளராக பி.ஆனந்தன் நியமனம்..

NEWS COVER
0
பகுஜன் சமாஜ் கட்சியின் புதிய மாநில செயலாளராக பி.ஆனந்தன் நியமனம்..!
GET NEWS COVER

 பகுஜன் சமாஜ் கட்சியின் புதிய மாநில செயலாளராக உச்ச நீதிமன்றத்தின் வழக்கறிஞர் பி. ஆனந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.

 பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில செயலாளராக பதவி வகித்து வந்த K.ஆர்ம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் இதுவரை 10க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதிலும் ஆங்காங்கே கடும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. பல்வேறு தரப்பினரும் இந்த படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

 இந்நிலையில் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பி.ஆனந்தன் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில செயலாளராக ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி மாநில ஒருங்கிணைப்பாளராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Tags: தமிழக செய்திகள்