Breaking News

மாநில கட்சி அங்கீகாரம் பெற்றது நாம் தமிழர் கட்சி.!

NEWS COVER
0
மாநில கட்சி அங்கீகாரம் பெற்றது நாம் தமிழர் கட்சி.!
GET NEWS COVER

நாம் தமிழர் கட்சிக்கு மாநில கட்சி அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது இதற்கான அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் வழங்கி உள்ளது.

தற்போது நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டது. இதில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை எனினும் எட்டுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் முறையே 3ம் இடம் மற்றும் 4ம் இடம் பெற்றது. மேலும் கணிசமான வாக்குகளையும் பெற்றுள்ளது. மாநில கட்சி அங்கீகாரம் என்பது தேர்தலில் செல்லுபடி ஆகும் மொத்த ஓட்டுகளில் 8% அதற்கு மேல் பெரும் கட்சிக்கு மாநில கட்சி அங்கீகாரம் வழங்கப்படும்.

 தற்போது நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிட்டு 8.16 சதவீதம் வாக்குகளை பெற்றுள்ளது இதன் மூலம் நாம் தமிழர் கட்சிக்கு இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது.

Tags: தமிழக செய்திகள்