நடிகர் டேனியல் பாலாஜி திடீர் மரணம்.!
NEWS COVER
0
நடிகர் டேனியல் பாலாஜி திடீர் மரணம்.!
GET NEWS COVER
தமிழ் திரைப்பட நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பு காரணமாக திடீரென உயிரிழந்தார் அவருக்கு வயது 48 தமிழ் சினிமாவில் பிரபல வில்லன் நடிகராக நடித்து வந்தவர் டேனியல் பாலாஜி.
இவர் வேட்டையாடு விளையாடு விஜய் நடித்த பிகில் உள்ளிட்ட பல திரைப்படங்களில் வில்லன் நடிகராக நடித்து பெயர் பெற்றவர். திருவான்மியூரில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தவர் நேற்று இரவு நெஞ்சுவலி ஏற்பட்ட உடன் கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலன் இன்றி இரவு உயிரிழந்தார்.
அவரது மறைவு தமிழ் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தமிழ் சினிமா துறையை சேர்ந்த பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Tags: தமிழக செய்தி்கள்