Smart Ration Card 15 நாட்களில் பெறுவது எப்படி? முழு விவரம்.
NEWS COVER
0
Smart Ration Card 15 நாட்களில் பெறுவது எப்படி?
GET NEWS COVER
புதிய ரேஷன் கார்டுக்கு எப்படி விண்ணப்பம் செய்வது ?
முதலில் தமிழக அரசின் அதிகாரப்பூர்வ https://www.tnpds.gov.in/ என்ற இணையதளம் செல்லுங்கள்.
2. புதிய குடும்ப அட்டை விண்ணப்பிக்க என்ற பகுதியை தேர்தெடுங்கள் அதன் பிறகு உங்கள் குடும்ப விவரங்கள் அனைத்தையும் கவனமாகவும் சரியாகவும் பூர்த்தி செய்யவும்.
அதில் விண்ணப்பதாரரின் பெயர், தந்தை அல்லது கணவர் பெயர் மற்றும் முகவரி என அனைத்தையும் தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும் பூர்த்தி செய்ய வேண்டும்.
அடுத்ததாக உங்கள் மாவட்டம், தாலுகா, கிராமம் என அதில் உள்ள பட்டியலில் தேர்ந்தெடுக்கவும். அடுத்து அதன் கீழ் உள்ள உறுப்பினரைச் சேர்க்க என்பதை அழுத்தவும்.
அதில் அனைத்து குடும்ப உறுப்பினர்களின் விவரங்களையும் பூர்த்தி செய்து கொள்ள வேண்டும் அதன் பிறகு குடும்ப அட்டை வகையைத் தேர்வு செய்யவும் அரிசி அட்டை , சர்க்கரை அட்டை என தேர்ந்தெடுத்து கொள்ள வேண்டும்.
அதன் பின்பு குடியிருப்பு சான்று பதிவேற்றம் செய்யுங்கள். ஆதார் அட்டை, பான் கார்டு, வாக்காளர் அட்டை, எரிவாயு நுகர்வோர் அட்டை, வரி ரசீது, பாஸ்போர்ட், வாடகை ஒப்பந்தம், குடிசை மாற்று வாரியம் ஒதுக்கீடு விபரம், வீட்டு ஆவணம், மின்சார கட்டண ரசீது, தொலைபேசி ரசீது, வங்கி பாஸ் புத்தகம், ஓட்டுனர் உரிமம், வீட்டு வசதி வாரிய ஆவணங்கள், தபால் அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை இணைக்க வேண்டும். அடுத்ததாக எரிவாயு இணைப்பு விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.
இறுதியாக விவரங்களைச் சமர்ப்பிக்க, என்பதை கிளிக் செய்யவும்.
விண்ணப்பத்தைப் பதிவு செய்த உடன், உங்களது கைபேசி எண்ணுக்கு குறிப்பு எண் அனுப்பப்படும். அந்த குறிப்பு எண்ணை வைத்து குடும்ப அட்டை விண்ணப்பநிலை என்ற பகுதிக்கு சென்று சரிபார்த்து கொள்ளலாம்.
Tags: தமிழக செய்திகள்