இனி 6 வயது தான்.! 1 ம் வகுப்பில் சேர அரசு புதிய கட்டுப்பாடு...!
NEWS COVER
0
இனி 6 வயது தான்.! 1 ம் வகுப்பில் சேர அரசு புதிய கட்டுப்பாடு...!
GET NEWS COVER
1ம் வகுப்பில் சேர்வதற்கு இனிமேல் 6 வயது நிரம்பி இருக்க வேண்டும் என மத்திய அரசு பள்ளிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அனைத்து அரசுப்பள்ளிகள், சிபிஎஸ்இ, மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
மத்திய கல்வி அமைச்சகத்தின் இணை செயலாளர் அர்ச்சனா சர்மா அவஸ்தி அனைத்து மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில்,
''இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 மற்றும் தேசிய கல்விக் கொள்கை 2020-ன் படி, அனைத்து மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் 6 வயதுக்கு மேல் (6+ years) உள்ள மாணவர்களுக்கு 1 ம் வகுப்பு சேர்க்கையைத் தொடங்க வேண்டும் என்றும், 2024- 25ஆம் கல்வி ஆண்டு விரைவில் தொடங்க உள்ள நிலையில், மாணவர் சேர்க்கையும் தொடங்க உள்ளது. உங்களின் மாநிலத்தில் 6 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள் ஒன்றாம் வகுப்பில் சேர்வதை உறுதிசெய்ய வேண்டுமெனவும் மேலும் இதுகுறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் தெரியப்படுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
Tags: கல்வி செய்திகள்