நடிகர் எஸ்.வி.சேகருக்கு 1 மாதம் சிறை தண்டனை.!
NEWS COVER
0
நடிகர் எஸ்.வி.சேகருக்கு 1 மாதம் சிறை தண்டனை.! சென்னை சிறப்பு நீதிமன்றம்.
GET NEWS COVER
நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகருக்கு 1 மாதம் சிறை தண்டனை வழங்கி சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2018 ம் ஆண்டு பெண் பத்திரிகையாளர்கள் குறித்து முகநூலில் அவதூறாக பதிவு செய்த விவகாரம் சர்ச்சையானது.
இதுகுறித்து பதிவு செய்யப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெயவேல் எஸ்.வி.சேகர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால் எஸ்.வி.சேகருக்கு 1 மாதம் சிறை தண்டனையும் 15000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
Tags: தமிழக செய்திகள்