Breaking News

குரூப் 4 தேர்வுக்கு இலவச பயிற்சி! செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

NEWS COVER
0
குரூப் 4 தேர்வுக்கு இலவச பயிற்சி.! செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
GET NEWS COVER
 தமிழக அரசு நடத்தும் தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு துறை மற்றும் அரசு பணியாளர் தேர்வாணையம் இணைந்து நடத்துகிறது.

 இது குறித்து அறிவித்துள்ள செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் திரு. ராகுல்நாத் அவர்கள்,

தேர்வுக்கு தயாராகி வரும் விண்ணப்பதாரர்கள் தங்களது புகைப்படம்,வேலைவாய்ப்பு பதிவு அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றை கொண்டு வந்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி காட்டும் அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளுமாறும் இதற்கான வகுப்புகள் வரும் ஜனவரி 2024 முதல் வாரத்தில் இருந்து துவங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

 மேலும் விவரங்களுக்கு  044 - 27426020 அல்லது 94990 55895 ஆகிய எண்களை தொடா்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்

Tags: தமிழக செய்திகள்