Breaking News

கால்பந்தாட்டத்தில் கோல்ட் மெடல் வென்ற அஜித் மகன் ஆத்விக்! வைரல் ஆகும் புகைப்படம்

NEWS COVER
0

கால்பந்தாட்டத்தில் கோல்ட் மெடல் வென்ற அஜித் மகன் ஆத்விக்! வைரல் ஆகும் புகைப்படம்




நடிகர் அஜித்குமாரின்  மகன் ஆத்விக்கிற்கு 8 வயதாகின்றது அவர் கால்பந்து விளையாட்டு போட்டியில் கோல்ட் மெடலை வென்றுள்ளார்.

நடிகை ஷாலினியை திருமணம் செய்துக் கொண்ட அஜித்திற்கு அனோஷ்கா மற்றும் ஆத்விக் என இரு பிள்ளைகள் உள்ளனர்.அஜீத்-ஷாலினியின் மகன் ஆத்விக் தனது சிறு வயதிலிருந்தே கால்பந்து விளையாட்டில் ஆர்வம் காட்டி வருகிறார். கால்பந்தாட்டத்தில் மிகப்பெரிய அளவில் ஆர்வத்துடன் இருந்து வருகிறார். 

இவர் கால்பந்து விளையாடும் புகைப்படங்கள் சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.

சென்னையின் FC Grassroot அகாடமியில் ஆத்விக் சிறப்பாக விளையாடி பதக்கத்தை வென்றுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்தான் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது. 

இந்தப் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஆத்விக்கிற்கு தொடர்ந்து பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். 

Tags: சினிமா