Breaking News

ரவுடி பேபி சூர்யா மீண்டும் கைது முழு விவரம்

NEWS COVER
0

ஆபாச புகைப்படம் வெளியிடுவேன் என கூறி பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த புகாரின் பேரில் ரவுடி பேபி சூர்யா கைது செய்யப்பட்டுள்ளார்.


ரவுடி பேபி என்கிற பெயரில் டிக் டாக் செய்து பிரபலமானவர் ரவுடி பேபி சூர்யா. சுப்புலட்சுமி என்ற இயற்பெயர் கொண்ட இவர் அடிக்கடி ஆபாசமாக பேசி யூடியூப் மற்றும் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு வந்துள்ளார். 

இந்தநிலையில், கடந்த ஜனவரி மாதம் கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் நடத்தி வரும் யூடியூப் சேனல் குறித்து ரவுடி பேபி சூர்யா ஆபாசமாக தகாத முறையில் பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீசார் ரவுடி பேபி சூர்யா மற்றும் அவருடைய நண்பர் சிக்கா என்கிற சிக்கந்தரையும் கைது செய்தனர்.அடுத்து இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள்சில மாதங்களுக்கு முன்பு தான்  ஜாமினில் வெளிவந்தார்கள்

இந்நிலையில் ரவுடி பேபி சூர்யாவும், அவரது நண்பரும் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் சித்ரா என்பவர் அளித்த புகாரில் விசாரணை நடத்திய சைபர் க்ரைம் போலீசார் ரவுடி பேபி சூர்யா, சிக்கந்தர் என்ற சிக்கா உள்பட 4 பேர் மீதும் 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். ரவுடி பேபி சூர்யா மற்றும் அவரது நண்பர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Tags: தமிழக செய்திகள்