Breaking News

மெடிக்கலில் வேலை செய்பவர் வங்கி கணக்கில் ரூ.753 கோடி டெபாசிட் - மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம்!

NEWS COVER
0

சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த மெடிக்கல் ஷாப் ஊழியரின் வங்கி கணக்கில் 753 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சங்கரன் கோவிலைச் சேர்ந்தவர் முகமது இத்ரீஸ். இவர் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மருந்துக் கடை ஒன்றில் பணிபுரிகிறார். இந்நிலையில் தனது கோட்டக் மஹேந்திரா வங்கிக் கணக்கிலிருந்து நண்பருக்கு ரூ. 2000 பணம் அனுப்பினார் முகமது இத்ரீஸ் . 

பணம் அனுப்பிய உடன் அவரது செல்போன் எண்ணுக்கு 753 கோடியே 48 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் மீதம் இருப்பு இருப்பதாக குறுந்தகவல் வந்ததாகக் கூறப்படுகிறது.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த முகமது இத்ரிஸ் உடனடியாக வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். 

இதனையடுத்து உடனடியாக அவரது வங்கி கணக்கை முடக்கிய வங்கி அதிகாரிகள் இது தொடர்பாக இத்ரிஸ்க்கு உரிய தகவல் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. 

Tags: தமிழக செய்திகள்