Breaking News

பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் யார் யார்? பட்டியல் இதோ..!

NEWS COVER
0

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த 2017 ம் வருடம் முதல் விஜய் டிவியில் ஒளிப்பரப்படுகின்றது அதில் இதுவரை ஆரவ், ரித்விகா, முகென், ஆரி , அசிம்  என பட்டம் வென்றுள்ளார்கள் இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் சீசன் 7வது நிகழ்ச்சி எப்போது துவங்கும் என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றார்கள், 



பிக்பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் 1 ம் தேதி துவங்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில் , தற்போது அதில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

பிக்பாஸ் சீசன் 7 விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஆன்லைனில் ஸ்ட்ரீம் செய்யப்படும். தினசரி எபிசோடுகள் இரவு 9.30 மணிக்கு தொடங்கி ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகும். மேலும் 24 மணி நேரமும் ஹாட்ஸ்டாரில் பார்த்து கொள்ளலாம். 

இந்த ஆண்டு, பிக் பாஸ் வரலாற்றில் முதல்முறையாக, வீடு இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சீசனில் மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டு உள்ளனர்.

ஐசு (நடனக் கலைஞர்), 

ஜோவிகா (வனிதா மகள்), 

அக்ஷயா உதயகுமார், 

அனன்யா எஸ் ராவ், 

விஜய் வர்மா, 

விஷ்ணு விஜய், 

பாவா செல்லதுரை, 

விசித்ரா, 

சரவண விக்ரம் (பாண்டியன் ஸ்டோர்ஸ்), 

மாயா கிருஷ்ணன், 

மணி சந்திரா, 

விஷ்ணு தேவி, 

பூர்ணிமா ரவி, 

ரவீணா தாஹா , 

யுகேந்திரன் வாசுதேவன், 

கூல் சுரேஷ், 

பிரதீப் ஆண்டனி, 

நிக்சன் 

ஆகியோர் போட்டியில் பங்கேற்று உள்ளனர். என இந்த பட்டியல் தற்போது சமூக கவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி இன்று மாலை 6 மணிக்கு ஒளிப்பரப்பகும் அப்போது மட்டுமே யார் யார் கலந்து கொள்வார்கள்  என்ற முழு தகவல்கள் கிடைக்கும்

கடந்த ஆண்டு நடைபெற்ற பிக்பாஸ் சீனன் மிகவும் காரசாரமாக நடைபெற்றது. அசீம் போட்டியின் வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டார்.

Tags: சினிமா