Breaking News

ஒரு கோடி முறை கோவிந்தா என எழுதினால் திருப்பதியில் குடும்பத்துடன் வி.ஐ.பி. தரிசனத்திற்கு அனுமதி!

NEWS COVER
0

ஏழுமலையான் கோயிலுக்கு ஒரு கோடி முறை "கோவிந்தா கோவிந்தா” என கைப்பட எழுதி வந்தால், குடும்பத்துடன் வி.ஐ.பி. தரிசனத்திற்கு அனுமதி என அறிவிக்கப்பட்டுள்ளது



திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஒரு கோடி முறை கோவிந்தா கோவிந்தா என கைப்பட எழுதி அனுப்ப வேண்டும் என்றும் அவ்வாறு எழுதி கொண்டு வந்தால் குடும்பத்துடன் விஐபி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படும் என்றும் திருப்பதி தேவஸ்தானம் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் 10,01,116ம் முறை கோவிந்தா கோவிந்தா என்று எழுதி வந்தால் ஒருவருக்கு மட்டும் விஐபி தரிசனம் செய்யப்படும் என்று அனுமதிக்கப்படும் என்று திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது

திருப்பதி எம்எல்ஏ பூமனா கருணாகர் ரெட்டி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற புதிய டிடிடி ஆட்சிமன்றக் குழுவின் முதல் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. 

கோவிந்தா கோவிந்தா என ஒரு கோடி முறை எழுதினால் அவர்களது குடும்பத்தினருக்கு விஐபி தரிசனம் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்

Tags: சேவை செய்திகள்