ஜான்சீனாவை சந்தித்த நடிகர் கார்த்தி காரணம் என்ன தெரியுமா
நடிகர் கார்த்தி WWE மல்யுத்த வீரர் ஜான்சீனாவை நேரில் சந்தித்துள்ளார்.
ஹைதராபாத்தில் உள்ள காஜிபௌலி உள்விளையாட்டு அரங்கில் 'சூப்பர்ஸ்டார் ஸ்பெக்கடல்' என்கிற பெயரில் மல்யுத்தப் போட்டி நடைபெறுகிறது.இந்த தொடரை சோனி ஸ்போர்ட்ஸ் நிறுவனம் நடத்துகிறது. இதுவே இந்தியாவில் நடக்கும் முதல் டபிள்யூடபிள்யூஈ(WWE) மல்யுத்தப் போட்டி.
இந்நிலையில் 16 முறை டபிள்யூடபிள்யூஇ பட்டம் வென்ற ஜான்சீனாவுடன் நடிகர் கார்த்தி நேரில் சந்தித்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
அத்துடன் 'ஜான்சீனா உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. மிகவும் அன்பாக இருந்ததற்கு நன்றி. சந்தித்த சில நிமிடங்களில் நீங்கள் அனைவரையும் சிறப்பாக உணரவைத்தது அற்புதம்' என கார்த்தி தெரிவித்துள்ளார்.
Tags: சினிமா