புதிதாக சொந்தமாக பிஸினஸ் தொடங்கிய நயன்தாரா! முழு விவரம்
நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கடந்த 9ம் தேதி ஒரு சிறப்பு அறிமுகம் என்று அறிவித்திருந்தார்.
இந்நிலையில் தனது சொந்த ஸ்கின் கேர் பிராண்டிற்கு “9 ஸ்கின்” என பெயர் சூட்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த நிறுவனத்தை, விக்னேஷ் சிவன், டெய்சி மார்கன் என்பவருடன் இணைந்து அவர் நடத்தவுள்ளார். இந்த ஸ்கின் கேர் பிராண்ட் பிசினஸ், வரும் செப்.29-ம் தேதி திறக்கப்பட உள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,
இன்று ஆறு வருட அயராத முயற்சியையும் அன்பையும் வெளிப்படுத்துவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.
‘9 SKIN’ பயணம் செப்டம்பர் 29, 2023 அன்று தொடங்குகிறது, அற்புதமான தோல் பராமரிப்பு அனுபவத்திற்கு தயாராகுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
Tags: சினிமா