Breaking News

லியோ திரைப்படத்தின் 'நா ரெடி' பாடலில் சில வரிகள் நீக்கம்! மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியம் நடவடிக்கை.

NEWS COVER
0

மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படத்திலுள்ள பாடலான 'நா ரெடி' பாடலில் சில வரிகளை நீக்கியுள்ளது.



விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாகிறது. மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ளது. சஞ்சய் தத், அர்ஜுன், த்ரிஷா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.

நடிகர் விஜய் பிறந்தநாளான ஜூன் 22ஆம் தேதி அன்று 'லியோ' திரைப்படத்தின் முதல் பாடலான 'நா ரெடி' என்ற பாடலின் முழு லிரிக்கல் வீடியோ வெளியானது. 

இந்த பாடல் வீடியோ சமூக வலைதளங்களில் தொடர்ந்து வைரலாகி வருவதோடு, விஜய் ரசிகர்கள் இந்த பாடலை தற்போதும் கொண்டாடி வருகின்றனர். 

இந்நிலையில் 'லியோ' திரைப்படத்தின் 'நா ரெடி' பாடலில் இடம்பெற்றுள்ள 

'பத்தாது பாட்டில் நான் குடிக்க ,

அண்டால கொண்டா Cheers அடிக்க'

'மில்லி உள்ள போனா போதும் 

கில்லி வெளிய வருவாண்டா' உள்ளிட்ட சில வரிகளையும், 

சிகரெட் பிடிப்பது போன்ற  காட்சிகளையும் நீக்கியுள்ளது மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம்.

இது தொடர்பாக மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் தந்துள்ள சான்றிதழும் அது குறித்த தகவல்களும் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.

Tags: சினிமா