Breaking News

டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமானால் ரூ.500 அபராதம்! சுகாதாரத்துறை அறிவிப்பு.

NEWS COVER
0

டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் இடத்தை வைத்திருந்தால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.



தமிழகத்தில் கடந்த சில தினங்களாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. காய்ச்சலால் பாதிக்கப்படும் பகுதிகளுக்கு மருத்துவ குழுவினர் சென்று, மேலும் யாருக்காவது பாதிப்பு இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்கின்றனர். தமிழகம் முழுவதும் முன்னெச்சரிக்கை பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மழை காரணமாக தமிழகம் முழுவதும் காய்ச்சல் பாதிப்புகளும், குறிப்பாக டெங்கு காய்ச்சலும் அதிகமாக பரவி வருகிறது. ஏடிஸ் கொசுக்களால் பரவும் டெங்கு காய்ச்சல் தமிழக பொது சுகாதார விதிகளின்படி அறிவிக்கை செய்யப்பட்ட நோயாக உள்ளது. எனவே அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் தங்களிடம் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டால் அது குறித்து சம்பந்தப்பட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். 

இல்லாவிட்டால் அவர்களுக்கு உரிய விதிகளின்படி அபராதம் விதிக்கப்படும்.அதே போன்று கொசு உற்பத்திக்கு வழிவகுக்கும் வகையில் செயல்படும் பொதுமக்கள், நிறுவனங்கள், நில உரிமையாளர்கள், கடைகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். விதிமீறலின் தன்மையை பொருத்து அவர்களுக்கு ரூ.500 வரை ஒவ்வொரு முறையும் அபராதம் விதிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் இடத்தை வைத்திருந்தால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. கொசு உற்பத்திக்கு வழிவகுக்கும் வகையில் செயல்படும் பொதுமக்கள், நிறுவனங்கள், கடைகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். முதல்முறை நோட்டீஸ் வழங்கப்படும் என்றும், அதனை ஓரிரு நாட்களில் சரி செய்யவில்லை என்றால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்