கேரளா ஓணம் லாட்டரியில் ரூ.25 கோடி பரிசை தட்டி சென்ற தமிழகத்தை சேர்ந்தவர் யார் தெரியுமா
NEWS COVER
0
கேரளா ஓணம் லாட்டரியில் ரூ.25 கோடி பரிசை தட்டி சென்ற தமிழகத்தை சேர்ந்தவர் யார் தெரியுமா
கேரள மாநிலத்தில் ஓணம் பம்பர் லாட்டரி குலுக்கல் ஒவ்வொரு செப்டம்பர் மாதமும் மாலை 3 மணிக்கு நடைபெறும். அதில் முதல் பரிசு வென்றவருக்கு பம்பர் 25 கோடி ரூபாய் வழங்கப்படும்.பரிசுத் தொகைமுதல் பரிசு: ரூ 25 கோடி 2வது பரிசு: ரூ. 1 கோடி 3வது பரிசு: ரூ. 50 லட்சம் 4வது பரிசு: ரூ. 5 லட்சம் 5வது பரிசு: ரூ. 2 லட்சம்
இந்த நிலையில் கோவை மாவட்டம் அன்னூரை சேர்ந்த, நடராஜன் என்பவருக்கு, கேரள லாட்டரி திருவோணம் பம்பர் முதல் பரிசு கிடைத்துள்ளது. பாலக்காடு மாவட்டம் வாளையாரில் நடராஜன், லாட்டரி சீட்டை வாங்கியுள்ளார். அவர் வாங்கிய TE230662 என்ற எண் கொண்ட லாட்டரி சீட்டுக்கு முதல் பரிசான 25 கோடி ரூபாய் விழுந்துள்ளது. என தகவல் வெளியாகி உள்ளது