திருச்சி மாவட்டத்தில் 23 ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சகத்தின் கீழ் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, திருச்சிராப்பள்ளி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தால் கலைஞர் நூற்றாண்டு சிறப்பு மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 23.09.2023 சனிக்கிழமையன்று காலை 8.00 மணி முதல் மதியம் 3.00 மணி வரை தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இம்முகாமில் 8வது முதல், SSLC/HSC, ITI, டிப்ளமோ, பட்டதாரிகள் மற்றும் B.E உட்பட பல்வேறு கல்விதகுதிகளுக்கு தனியார் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்யவுள்ளனர்.
எனவே தனியார் துறையில் வேலைதேடும் இளைஞர்கள் https://www.tnprivatejobs.tn.gov.in/candidate/Home/ca_signup என்ற இணையதளத்தில் பதிவு செய்துகொள்வதோடு, இவ்வேலைவாய்ப்பு முகாமில் நேரடியாக கலந்துகொண்டு பணிவாய்ப்பை பெற்றிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தங்கள் நிறுவனத்தில் காலிப்பணியிடம் உள்ள தனியார்துறை நிறுவனங்களும் இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள கீழ்காணும் google form -ல் ( https://forms.gle/AgyTT53FsQoEnpuH9 ) பதிவு செய்து தகுதியுடைய வேலைநாடுநர்களை தேர்ந்தெடுத்து பயன்பெறுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வேலைவாய்ப்பு முகாமானது வேலைநாடுநர்களுக்கும், வேலையளிக்கும் நிறுவனங்களுக்கும் முற்றிலும் கட்டணமில்லா சேவையாகும்.
நடைபெறும் இடம் : தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ,திருச்சிராப்பள்ளி LANDLINE -0431-2413510
Tags: வேலை வாய்ப்பு செய்திகள்