Breaking News

மயிலாடுதுறை மாவட்டத்தில் 16 ம் தேதி வேலை வாய்ப்பு முகாம்

NEWS COVER
0

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் – மகளிர் திட்டம் இணைந்து கலைஞர் நூற்றாண்டு சிறப்பு மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 16.09.2023 சனிக்கிழமையன்று காலை 8.30 மணி முதல் மதியம் 3.00 மணி வரை செம்பனார்கோவில் கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 



இம்முகாமில் 8வது, SSLC/HSC, ITI, டிப்ளமோ, பட்டதாரிகள் மற்றும் B.E உட்பட பல்வேறு கல்விதகுதிகளுக்கு தனியார் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான 18-35 வயதுக்குட்பட்ட பணியாளர்களை தேர்வு செய்யவுள்ளனர். 

எனவே தனியார் துறையில் வேலைதேடும் இளைஞர்கள் https://www.tnprivatejobs.tn.gov.in/candidate/Home/ca_signup என்ற இணையதளத்தில் பதிவு செய்துகொள்வதோடு, இவ்வேலைவாய்ப்பு முகாமில் நேரடியாக கலந்துகொண்டு பணிவாய்ப்பை பெற்றிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

தங்கள் நிறுவனத்தில் காலிப்பணியிடம் உள்ள தனியார்துறை நிறுவனங்களும் இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு தகுதியுடைய வேலைநாடுநர்களை தேர்ந்தெடுத்து பயன்பெறுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வேலைவாய்ப்பு முகாமானது வேலைநாடுநர்களுக்கும், வேலையளிக்கும் நிறுவனங்களுக்கும் முற்றிலும் கட்டணமில்லா சேவையாகும். மேலும் தகவலுக்கு 04364299790 

நடைபெறும் இடம்: கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, செம்பனார்கோவில், மயிலாடுதுறை - 609309 Landmark: https://goo.gl/maps/Fao91Pqc8oRwYdzY7

Tags: வேலை வாய்ப்பு செய்திகள்