குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம்; இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்
NEWS COVER
0
தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம்; இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்
தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என தேர்தலின்போது திமுக வாக்குறுதி அளித்திருந்தது.
இந்நிலையில், மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை காஞ்சிபுரத்தில் இன்று முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார். இதன் முன்னோட்டமாக ஒரு சில பயனாளிகளுக்கு சோதனை அடிப்படையில் ஒரு ரூபாய் வரவு வைக்கப்பட்டது. இதனால் பயனாளிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Tags: தமிழக செய்திகள்