மதுரை அதிமுக எழுச்சி மாநாடு Live வீடியோ
மதுரை அதிமுக எழுச்சி மாநாடு Live வீடியோ
மதுரை வலையங்குளத்தில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு பிரமாண்டமாக தொடங்கியுள்ளது.
அ.தி.மு.க. பொதுச்செயலாளராக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட பிறகு, முதன்முறையாக அக்கட்சியின் வீர வரலாற்றின் எழுச்சி மாநாடு மதுரையில் நடைபெற்று வருகிறது.
மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து தொண்டர்கள் பங்கேற்க வசதியாக பிரம்மாண்ட மாநாட்டு திடல், அதன் அருகே 5 இடங்களில் வாகனங்களை நிறுத்துமிடம் அமைக்கப்பட்டுள்ளது.
மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நேற்று மதுரை வந்தடைந்தார்.
இன்று காலை மாநாட்டை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 51 அடி உயர கொடிக்கம்பத்தில் கட்சியின் கொடியை ஏற்றித் தொடங்கி வைத்தார். அவருக்கு ஹெலிகாப்டரில் இருந்து மலர்கள் தூவி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த மாநாட்டில் பல முக்கிய அதிமுக தலைவர்கள் இந்த கலந்துகொள்ள உள்ளனர்.
லைவ் வீடியோ பார்க்க:-
https://www.youtube.com/watch?v=GnlApQGDSsk
Tags: அரசியல் செய்திகள்