Breaking News

நடிகர் விஜய்யின் மகன் இயக்குநராக அறிமுகமாகிறார்!! லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

NEWS COVER
0

நடிகர் விஜய்யின் மகன் இயக்குநராக அறிமுகமாகிறார்!! லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு



நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு லண்டன் நாட்டில் திரைப்பட இயக்கம் சம்மந்தமாக படிப்பில் கவனம் செலுத்தி வந்தார் மேலும் தனது மகன் சஞ்சய்க்கு நடிப்பை தாண்டி படங்களை இயக்குவதில்தான் ஆர்வம் இருப்பதாக விஜய் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜேசன் சஞ்சய் ‘புல் தி டிரிக்கர்’ என்கிற குறும்படத்தை இயக்கியிருந்தார். இந்த குறும்படம் யூடியூபில் வெளியானது.

கூடிய விரைவில் அவர் இயக்குநராக களமிறங்குவார் என்று திரையுலக வட்டாரத்தில் பேசப்படுகிறது.

இந்நிலையில் லைகா நிறுவனத்தின் அடுத்த திரைப்படத்தில் இயக்குனரகா அறிமுகம் ஆகின்றார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகின்றது



Tags: சினிமா