Breaking News

அங்காடி தெரு படத்தில் நடித்த நடிகை சிந்து காலமானார்!

NEWS COVER
0

மார்பக புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த அங்காடித்தெரு நடிகை சிந்து காலமானார். 



வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான அங்காடித் தெரு படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் சிந்து. பல்வேறு சீரியல்களிலும் நடித்து வந்த இவருக்கு கடந்த 2020ம் ஆண்டு மார்பக புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அதற்காக சிகிச்சை எடுக்கத் தொடங்கிய சிந்துவால் கேன்சர் பாதிப்பில் இருந்து மீள முடியவில்லை.

கடந்த சில நாட்களாக சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

அவருடைய உடல் அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் இன்று விருகம்பாக்கம் மின் மயானத்தில் இறுதி சடங்குகள் நடைபெறுகிறது .நடிகை சிந்துவின் மறைவுக்கு சின்னத்திரை சேர்ந்த நடிகர் ,நடிகைகளும், திரைத்துறையை சேர்ந்தவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

Tags: சினிமா