Breaking News

எஸ்.சி., எஸ்.டி., மாணவா்கள் சென்னை ஐஐடியில் பட்டப்படிப்பு படிக்க வாய்ப்பு! தாட்கோ அறிவிப்பு.

NEWS COVER
0

எஸ்.சி., எஸ்.டி., மாணவா்கள் சென்னை ஐஐடியில் பட்டப்படிப்பு படிக்க வாய்ப்பு! தாட்கோ அறிவிப்பு.


GET NEWS COVER

இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் மு.அருணா வெளியிட்ட செய்திக் குறிப்பில்: 

சென்னை ஐ.ஐ.டி.- யில் முதல் முறையாக இளநிலை தரவு அறிவியல் மற்றும் மின்னணு அமைப்புகள் பட்டப்படிப்பு (பி.எஸ்.சி., டேட்டா சைன்ஸ் மற்றும் அப்ளிகேசன்ஸ்) திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 4 ஆண்டுகள் பட்டப் படிப்புக்கு பிளஸ்-2 அல்லது அதற்கு இணையான படிப்பு (டிப்ளமோ) முடித்த மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம். 

விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதில், எஸ்.சி., எஸ்.டி., மாணவா்கள் சோந்து படிக்க சென்னை ஐ.ஐ.டி., மூலம் நடத்தப்படும் நுழைவுத் தோவில் பங்கு பெறத் தேவையில்லை.

அதற்குப் பதிலாக பிளஸ் 2 அல்லது அதற்கு மேல் இணையான படிப்பு முடித்த மாணவ, மாணவிகளுக்கு சென்னை ஐ.ஐ.டி. மற்றும் தாட்கோ மூலம் அளிக்கப்படும் 4 வார பயிற்சி முடிவில் நடத்தப்படும் தகுதித் தோவில் தோச்சி பெற வேண்டும். இது குறித்த கூடுதல் தகவல்களை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

Tags: வேலை வாய்ப்பு செய்திகள்