Breaking News

நாதஸ்வரம் சீரியல் ஸ்ருதியின் கணவர் மாரடைப்பால் மரணம் - திருமணமான ஒரே ஆண்டில் நிகழ்ந்த சோகம்.

NEWS COVER
0

நாதஸ்வரம்’ சீரியல் மூலம் பிரபலமடைந்த நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியாவின் கணவர் மாரடைப்பால் மரணமடைந்துள்ளது சின்னத்திரை நடிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

GET NEWS COVER

சன் டிவியில் ஒளிபரப்பான நாதஸ்வரம் தொடரின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் ஸ்ருதி சண்முகபிரியா. இவருக்கும் அரவிந்த் சேகர் என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது.அரவிந்த் சேகர் 2022 ஆம் ஆண்டுக்கான மிஸ்டர் தமிழ்நாடு பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் அரவிந்த் சேகர் நேற்று மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். இருவருக்கும் திருமணமாகி ஒருவருடமே ஆன நிலையில் அரவிந்த் சேகர் மரணமடைந்திருப்பது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

திருமணத்துக்கு பின் சீரியலை விட்டு விலகி தொழில் கவனம் செலுத்தி வந்த அவருக்கு ஏற்பட்டிருக்கும் இந்த இழப்பிலிருந்து மீண்டு வர ரசிகர்கள் ஆறுதல் சொல்லி வருகின்றனர்.

Tags: சினிமா