சென்னையில் நீட் தேர்வில் தோல்வி தற்கொலை செய்து கொண்ட மாணவனின் தந்தையும் தற்கொலை
சென்னை குரோம்பேட்டை சேர்ந்த 19 வயது மாணவர் நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்து கொண்டார் . வசித்து வந்த ஜெகதீஸ்வரன் என்ற மாணவர் மருத்துவ படிக்கும் எண்ணத்தில் நீட் தேர்வை எதிர்கொண்ட நிலையில் இரண்டு முறை நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியாமல் போனது. இதன் காரணமாக கடும் மன உளைச்சலில் இருந்த அவர், நேற்று முன்தினம் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தற்கொலை செய்து கொண்ட மாணவர் ஜெகதீஸ்வரனின் தந்தை செல்வ சேகர் நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் . மகனின் சாவுக்கு நீட் தேர்வு தான் காரணம் என்று பேட்டியளித்திருந்த அவர் மனைவியை பிரிந்து மகனுடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில் மகனின் பிரிவை தாங்க முடியாமல் தந்தையும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags: தமிழக செய்திகள்