ஆகஸ்டு 3 ம் தேதி நாளை 5 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!!
ஆகஸ்டு 3 ம் தேதி நாளை 5 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!!
GET NEWS COVER
சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு தினத்தை அரசு விழாவாக கொண்டாடி வருகிறது தமிழக அரசு.
இதனை முன்னிட்டு திருப்பூர், சேலம் ,ஈரோடு மாவட்டத்திற்கு நாளை ஆகஸ்ட் 3 ம் தேதி வியாழக்கிழமை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடுமுறை தினத்தை ஈடு செய்யும் வகையில் ஆகஸ்ட் 12ம் தேதி வேலை நாளாக கடைபிடிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் நாமக்கல் மாவட்டத்தில் கடையெழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி விழா, அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக நாளை 03 ம் தேதி நாமக்கல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல் தர்மபுரி மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு தருமபுரி மாவட்டத்தில் ஆகஸ்ட் 3ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆட்சியர் சாந்தி உத்தரவிட்டுள்ளார். ஆகஸ்ட் 3 உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் ஆகஸ்ட் 26ஆம் தேதி வேலை நாளாக செயல்படும் என தருமபுரி ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில் நாளை ஈரோடு, சேலம், திருப்பூர், நாமக்கல் , தர்மபுரி ஆகிய 5 மாவட்டங்களிலும் அனைத்து பள்ளிகள் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது
Tags: தமிழக செய்திகள்