நிதி கேட்டு பேக்கரியில் தகராறு செய்த நாம் தமிழர் கட்சியினர் 2 பேர் கைது! வீடியோ இணைப்பு.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒரப்பம் பகுதியில் உள்ள பேக்கரியில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கருணாகரன் மற்றும் சக்திவேல் ஆகியோர் கட்சிக்கு நிதி கேட்டுள்ளனர். பேக்கரி உரிமையாளர் மறுத்ததால் கடையில் உள்ள பொருட்களை சேதப்படுத்தியுள்ளனர்.
GET NEWS COVER
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒரப்பம் பேருந்து நிலையம் அருகே கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த நூருதின் என்பவரது மகன் ரபிக் என்பவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக பேக்கரி கடை வைத்து வியாபாரம் நடத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று மாலை நாம் தமிழர் கட்சியை சேர்ந்த கருணாகரன் மற்றும் சக்திவேல் ஆகிய இருவரும் பேக்கரிகடைக்கு சென்று நாம் தமிழர் கட்சியின் சார்பில் இந்தப் பகுதியில் குளங்களை தூர்வார வேண்டும் எனவும், இதற்கு நிதி வேண்டுமென கடை உரிமையாளர் ரபிக்கிடம் 5 ஆயிரம் ரூபாய் நீதி கேட்டுள்ளனர்.
இதற்கு 5,000 ரூபாய் கொடுக்க முடியாது என்ற உரிமையாளர், 500 ரூபாய் தருகிறேன் என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த கருணாகரன் கடையில் உள்ளபொருட்களை தூக்கி போட்டு உடைத்து ரகளையில் ஈடுபட்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் கந்திகுப்பம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்த நிலையில் அங்கு வந்த காவல் ஆய்வாளர் சவிதா, காவல் உதவி ஆய்வாளர் அன்பழகன் நேரில் விசாரணை நடத்தினர். பின்னர் இது குறித்து ரபிக் கொடுத்த புகாரின் பேரில் நாம் தமிழர் கட்சியைச் சார்ந்த கருணாகரன் மற்றும் சக்திவேல் ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
வீடியோ பார்க்க:-
https://twitter.com/Saran69041939/status/1689974659419410432