Breaking News

ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு செப்.18 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

NEWS COVER
0

ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு செப்.18 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்



அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் காலியாக உள்ள 685 ஓட்டுநா், நடத்துநா் பணியிடங்களுக்கு செப்.18-ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என போக்குவரத்து துறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு விரைவுப்போக்குவரத்துக் கழகத்தில் 685 ஓட்டுநா், நடத்துநா்கள் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

இதனால், இப்பணிக்கு தகுதியுடைய நபா்கள் ஆக.18 (வெள்ளிக்கிழமை) முதல் செப்.18-ஆம் தேதி 1 மணி வரை  https://www.arasubus.tn.gov.in/ எனும் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். 

மேலும் பணி நியமனம் முற்றிலும் வெளிப்படைத் தன்மையுடன் இருக்கும். தகுதி அடிப்படையில் மட்டுமே நியமனம் நடைபெறும். 

தகுதி பெறும் விண்ணப்பதாரா்கள் எழுத்துத் தோவு, ஓட்டுநா்-நடத்துநா் திறன் தோவு மற்றும் நோகாணல் ஆகியவற்றின் அடிப்படையில் தோவு செய்யப்படுவா் என அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க:-

https://www.arasubus.tn.gov.in/

Tags: வேலை வாய்ப்பு செய்திகள்