வண்டலூர் பூங்கா ஆகஸ்ட் 15 ஆம் தேதி அன்று திறந்திருக்கும் - பூங்கா நிர்வாகம் அறிவிப்பு..
NEWS COVER
0
வண்டலூர் பூங்கா ஆகஸ்ட் 15 ஆம் தேதி அன்று திறந்திருக்கும் - பூங்கா நிர்வாகம் அறிவிப்பு..
சுதந்திர தினத்தையொட்டி ஆகஸ்ட் 15ம் தேதி வண்டலூர் பூங்கா திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக வண்டலூர் பூங்காவுக்கு செவ்வாய்க் கிழமைகளில் மூடப்பட்டிருக்கும். பூங்கா பணியாளர்களும் அன்று ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த நிலையில் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது.
விடுமுறை நாட்களில் வண்டலூர் பூங்காவிற்கு ஏராளமான பார்வையாளர்கள் வந்து செல்வார்கள் என்பதால் சுதந்திர தின விடுமுறையையொட்டி ஆகஸ்ட் 15ம் தேதி வண்டலூர் உயிரியல் பூங்கா செயல்படும் என பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Tags: தமிழக செய்திகள்