கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்! காஞ்சிபுரத்தில் செப்.15-ம் தேதி முதல்வர் தொடங்கி வைக்கிறார்.
NEWS COVER
0
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் காஞ்சிபுரத்தில் செப்.15-ம் தேதி முதல்வர் தொடங்கிவைக்கிறார்
GET NEWS COVER
தமிழகத்தில் பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை' திட்டத்தை அண்ணா பிறந்த நாளான செப்.15-ம் தேதி அவர் பிறந்த ஊரான காஞ்சிபுரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலின்போது அளித்த வாக்கு றுதிப்படி, குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம், இந்தாண்டு பட் ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இத் திட்டத்துக்கு ரூ.7 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டதுடன், செப்.15-ம் தேதி அண்ணா பிறந்த தினத்தன்று திட்டம் தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
முதல் கட்டமாக கடந்த ஜுலை 24-ம் தேதி முதல் 3 நாட்கள் நியாய விலைக்கடை ஊழியர்கள் மூலம் வீடு வீடாக விண்ணப்பங்கள் விநி யோகிக்கப்பட்டன.
விண்ணப்பங்கள் அனைத்தும் இதற்கென உருவாக்கப்பட்ட செய லியில் பதிவு செய்யப்பட்டு, தகுதியான பயனாளிகளுக்கு செப்.15-ம் தேதி முதல் அவரவர் வங்கிக் கணக்குகளில் மாதம் ரூ. 1000 பணம் வரவு வைக்கப்பட உள்ளது.
இந்நிலையில், இத்திட்டத்தை அண்ணா பிறந்த தினமான செப்.15-ம் தேதி, அவர் பிறந்த காஞ்சிபுரத்தில் தொடங்க முடி வெடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, காஞ்சிபுரத்தில் அன்று நடைபெறும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார். இதற்கான இடம் தேர்வு செய்யும் பணியில் மாவட்ட நிர் வாகம், முதல்வரின் அலுவலக அதி காரிகள்ஈடுபட்டுள்ளனர்.
விரைவில் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என
காஞ்சிபுரத்தில், பயனாளிகள் சிலருக்கு நேரடியாக உரிமைத் தொகை வழங்கும் முதல்வர், அப்போதே வங்கிக்கணக்கில் மீதமுள்ளவர்களுக்கு பணத்தை செலுத்தும் வசதியையும் தொடங்கி வைப்பார் என கூறப்படுகிறது
Tags: தமிழக செய்திகள்