தென்காசி மாவட்டத்திற்க்கு 144 தடை உத்தரவு காரணம் தெரியுமா
தென்காசி மாவட்டத்திற்க்கு 144 தடை உத்தரவு காரணம் தெரியுமா
தென்காசி மாவட்டத்தில் ஒண்டிவீரனின் 253-வது வீரவணக்க நிகழ்ச்சி மற்றும் பூலித்தேவன் 308-வது பிறந்தாள் நிகழ்ச்சியை முன்னிட்டு மாவட்ட முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டம், பச்சேரி கிராமத்தில் ஒண்டிவீரன் 252-வது வீரவணக்க நிகழ்ச்சி வரும் 20 ஆகஸ்ட் அன்று நடைபெற உள்ளது . இதனை முன்னிட்டு தென்காசியில் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் பிரமுகர்கள் என பலர் கலந்துக்கொள்வார்கள்.
அதனால் முன் எச்சரிக்கையாக 4 நாட்கள் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சிவகிரி தாலுகா நெல்கட்டும் சேவலில் உள்ள புலிதேவனின் 308-வது பிறந்த நாள் வரும் 01.09.23 அன்று கொண்டாடபட உள்ளதால் 30.08.23 அன்று மாலை 6 மணி முதல் 02.09.23 அன்று காலை 10 மணி வரை 144 உத்தரவு அமலில் இருக்கும் என மாவட்ட ஆட்சியர் ரவிச் சந்திரன் தெரிவித்துள்ளார்.
Tags: தமிழக செய்திகள்