மோட்டார் சைக்கிள் பந்தய விபத்தில் 13 வயது இளம் வீரர் உயிரிழப்பு முழு விவரம்
பெங்களூருவைச் சேர்ந்த 13 வயது மோட்டார் சைக்கிள் வீரர் கொப்பரம் ஷ்ரேயாஸ் ஹரீஷ் மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழப்பு.
பெங்களூரை சேர்ந்த ஷ்ரேயாஸ் ஹரீஷ், தேசிய அளவில் பல பந்தயங்களில் வெற்றி பெற்றுள்ளார் ,
இந்நிலையில் மெட்ராஸ் இன்டர்நேஷனல் சர்க்யூட்டில் மோட்டார் சைக்கிள் ரேசிங் சாம்பியன்ஷிப் 2023 இன் போது அவர் விபத்தில் சிக்கினார். போட்டி நடைபெற்றுது.மூன்றாவது சுற்றில் பந்தயம் தொடங்கிய உடனேயே டர்ன் 1 இல் இருந்து வெளியேறும் போது ஷ்ரேயாஸ் விபத்தில் சிக்கியுள்ளார். விபத்தில் ஸ்ரேயாஸின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவரது உயிர் பிரிந்தது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஸ்பெயினில் நடந்த மினிஜிபி வேர்ல்ட் பைனலில் பங்கேற்ற பின்னர், பைக் பந்தயத்தில் உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை எட்டிய முதல் இந்தியர் என்ற வரலாற்றைப் படைத்திருந்தார்.
இந்த சோகமான சம்பவத்தைத் தொடர்ந்து, நிகழ்வின் விளம்பரதாரர், மெட்ராஸ் மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் திட்டமிடப்பட்ட மீதமுள்ள பந்தயங்களை ரத்து செய்யப்பட்டுள்ளது
Tags: தேசிய செய்திகள்