கனராவங்கியில் மகிளா சம்மான் சேமிப்பு திட்டம் தொடக்கம்! முழு விவரம்!
இந்தியாவில் பெண்களுக்கு மத்திய அரசு வழங்கும் சிறந்த சேமிப்பு திட்டமான மகிளா சம்மான் சேமிப்பு திட்டத்தை கனரா வங்கியில் தொடங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
GET NEWS COVER
இந்தியாவில் 2023-24 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் பெண்களுக்கான சிறப்பு சேமிப்பு திட்டமான மகிளா சம்மான் சேமிப்பு திட்டம் குறித்து நிதி அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டார்.
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை கனரா வங்கி அதன் அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
இது பெண்களின் நிதி வளர்ச்சி மற்றும் அதிகாரமளிக்கும் இதில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பெயரில் முதலீட்டை தொடங்கலாம் என வங்கி தெரிவித்துள்ளது.
இந்த திட்டத்தில் முதலீடு செய்யப்படும் டெபாசிட்களுக்கு ஆண்டுக்கு 7.5 சதவீதம் வட்டி கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: முக்கிய செய்திகள்