Breaking News

சிவகார்த்திகேயனின் மாவீரன் திரை விமர்சனம்

NEWS COVER
0

நடிகர்கள்:-

சிவகார்த்திகேயன்

அதிதி ஷங்கர்

யோகி பாபு

சரிதா

மோனிஷா பிளஸ்ஸி

மிஷ்கின்

திலீபன்

மற்றும் பலர்

இசை:-

பரத் சங்கர்

இயக்கம்:-

மடோன் அஷ்வின்

கதை:-

சென்னையின் கூவம் ஆற்றங்கரையில் தன் அம்மா மற்றும் தங்கையுடன் வாழ்ந்துவருகிறார் கார்டுனிஸ்ட் ஓவியரான சத்யா 

அதே சமயம், சத்யா வாழும் குடியிருப்புப் பகுதியை காலி செய்யும் மாநகராட்சி அவரின் குடும்பத்தையும், அந்த ஏரியா மக்களையும் அடுக்குமாடி குடியிருப்பில் அமர்த்துகிறது. அங்கு சென்ற பிறகே அந்த வீடுகள் தரமில்லாமல் இருப்பது தெரிய வருகிறது. தரமில்லாத வீடுகளால் தினம் தினம் பிரச்சனை ஏற்படுகிறது. ஆனால் பிரச்சனைகளை சகித்துக் கொண்டு வாழ்கிறார்  சத்யா.

அந்த தரமில்லாத வீடுகளைக் கட்டியது அமைச்சர் ஜெயக்கொடிக்கு சொந்தமான நிறுவனம் என்பதை அறிந்துகொண்டாலும், அமைச்சரையும் அவரின் ஆட்களையும் எதிர்க்க தைரியம் இல்லாமல் பயப்படுகிறார் சத்யா. ஒருகட்டத்தில் அம்மாவின் பேசிய பேச்சால்  தற்கொலைக்கு முயலும் சத்யாவின் காதிற்கு மட்டும் ஒரு குரல் கேட்கத் தொடங்குகிறது. 

அந்த கோழையான கார்டூன் கலைஞர் சத்யாவிற்க்கு அந்த குரல் எப்படி அவரை மாவீரனாக ஆக்கியது எப்படி அமைச்சரை எதிர்கொண்டார், மக்களை எப்படி காப்பாற்றினார் என்பதே மாவீரன் படத்தின் மீதிக் கதை.

Tags: சினிமா