அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பணி! அரசானை வெளியிட்ட தமிழக அரசு
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை கீழ் செயல்படும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் 812 ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
GET NEWS COVER
இதுகுறித்து வெளியான அரசானையில்
812 ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப் பணியிடங்கள் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்கள் மூலம் நிரப்பப்பட உள்ளன.
ஓட்டுனர் மற்றும் நடத்துனர் காலியிடங்களின் எண்ணிக்கை மண்டலம் வாரியாக
கும்பகோணம் - 174
சேலம் - 254
கோயம்புத்தூர் - 60
மதுரை - 136
திருநெல்வேலி - 188
கல்வித் தகுதி :-
டிரைவர் பணியிடங்களுக்கு 8 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
கண்டக்டர் பணியிடங்களுக்கு 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
நடத்துனர் லைசன்ஸ் வைத்திருக்கவேண்டும்
வயதுத் தகுதி :-
இந்தப் பணியிடங்களுக்கு 24 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 17,700 - 56,200
தேர்வு செய்யப்படும் முறை:-
இந்தப் பணியிடங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்
Tags: வேலை வாய்ப்பு செய்திகள்