Breaking News

ஆன்லைனில் வாங்கிய கடன் - நிர்வாண போட்டோ அனுப்பி மிரட்டல் - விஷம் குடித்து வாலிபர் தற்கொலை முழு விவரம்

NEWS COVER
0

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகில் உள்ள ஏரி வேலூர் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டாலின் விவசாயி. இவரது இளைய மகன் ராஜேஷ் (வயது 27) கும்பகோணத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். ராஜேஷ் மொபைல் போன் ஆப்பில் ஆன்லைன் மூலம் அடிக்கடி கடன் பெற்று அதனை திருப்பி செலுத்தி வந்துள்ளார்.


GET NEWS COVER

இருப்பினும் கடன் கொடுத்த நிறுவனம், கடன் இன்னும் பாக்கி உள்ளதாக கூறி உள்ளது. இதனை திருப்பி செலுத்தாவிட்டால், மொபைல்போனில் உள்ள புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிடுவோம் எனவும் மிரட்டி உள்ளது. மேலும் அவருடைய புகைப்படத்தை நிர்வாணமாக மார்ஃபிங் செய்து பணம் கேட்டு மிரட்டியுள்ளார்கள்

அதை பார்த்த ராஜேஷ் கடும் அதிர்ச்சியடைந்துள்ளார்.பணம் கட்டவில்லை என்றால் இதனை உனது காண்டாக் லிஸ்டில் உள்ள அனைவருக்கும் வெளியிடுவோம் என்று கடன் கொடுத்த நிறுவனம் ராஜேஷை மிரட்டியுள்ளார்கள். ம்இதனால் மன உளைச்சலில் தவித்து வந்த ராஜேஷ் வயலுக்கு அடிக்கும் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக வலங்கைமான் காவல் நிலையப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Tags: தமிழக செய்திகள்