8ம் வகுப்பு போதும் அரசு வேலைவாய்ப்பு உடனே விண்ணப்பியுங்கள்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் பணி காலியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில். நாகர்கோவில் சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் அலுவலகத்தில் காலியாக உள்ள ஒரு அலுவலக உதவியாளர் பணியிடம் நிரப்பபட உள்ளது. இப்பணியிடத்திற்கு கல்வித்தகுதியாக 8-ஆம் வகுப்பு தேர்ச்சியும், மிதி வண்டி ஓட்டவும் தெரிந்திருக்க வேண்டும்.
இப்பணிக்கு காலமுறை ஊதியம் விகிதம் ரூ.15700-58100 (Level - 1) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடம் இனசுழற்சி அடிப்படையில் ஆதிதிராவிடம் வகுப்பை சார்ந்த முன்னுரிமை பிரிவினருக்கு அரசாணை எண்:122, மனித வள மேலாண்மைத்துறை, நாள்: 02.11.2021 இன் படி முன்னுரிமை சுழற்சி முறை பின்பற்றி தேர்ந்தெடுக்கப்படுவர்.
வயது வரம்பு குறைந்தபட்சம் 18 ஆகவும் அதிகபட்ச வயது வரம்பு 37 மிகாமல் இருக்க வேண்டும். மேலும் மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள், முன்னாள் இராணுவத்தினர் மற்றும் உயர்கல்வி தகுதி உடைய விண்ணப்பதாரர்களுக்கு அரசு விதிமுறைக்குட்பட்டு வயது வரம்பு தளர்வு வழங்கப்படும்.
இப்பணி நியமனத்திற்கு தேவையான தகுதிகள், இனசுழற்சி ஒதுக்கீடு மற்றும் விண்ணப்பப்படிவம் ஆகியவை இம்மாவட்டத்தின் www.Kanniyakumari.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 31.07.2023 மாலை 5 மணிக்குள் துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள், கிருஷ்ணன்கோவில், நாகர்கோவில் - 1 என்ற முகவரியில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் திரு.பி.என்.ஸ்ரீதர் அவர்கள் கேட்டுக்கொள்கிறார்
மேலும் விவரங்களுக்கு:-
https://cdn.s3waas.gov.in/s38fe0093bb30d6f8c31474bd0764e6ac0/uploads/2023/07/2023071376.pdf
Tags: வேலை வாய்ப்பு செய்திகள்