திருப்பூர் மாவட்டத்தில் ஆகஸ்டு 5 ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்!

NEWS COVER
0

தமிழக அரசின் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் சார்பில் திருப்பூர் மாவட்டத்தில் வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.


GET NEWS COVER

டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் இணைந்து தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஒன்றினை ஆகஸ்ட் 5ஆம் தேதி அன்று அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடத்துகிறது. 

இந்த வேலை வாய்ப்பு முகாமில் 200க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளனர்.இவர்கள் தங்களுக்கு தேவையான பணியாளர்களை அதிக அளவில் நியமிக்க உள்ளதால் விருப்பமுள்ளவர்கள் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 

காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் விவரங்களுக்கு:-

https://www.tnprivatejobs.tn.gov.in/ViewData/jobfair_view/252307280010

Tags: வேலை வாய்ப்பு செய்திகள்