பள்ளிகள் திறப்பு மீண்டும் ஒத்திவைப்பு! பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு
NEWS COVER
0
பள்ளிகள் திறப்பு மீண்டும் ஒத்திவைப்பு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு!
GET NEWS COVER
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் தேதி மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் இன்னும் குறையாத காரணத்தினால் ஏற்கனவே தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கும் தேதி ஜூன் 7-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இன்னும் கோடை வெயிலின் தாக்கம் குறையாத காரணத்தினாலும் வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்க கூடும் என்று வானிலை மையம் அறிவித்த படியாலும் பள்ளிகள் திறப்பினை மேலும் ஒத்திவைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் வைக்கப்பட்டன.
இதையடுத்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி முதலமைச்சர் மு க ஸ்டாலின் உடன் ஆலோசனை நடத்தினார்.
அதன் பின்னர் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கும் தேதி 6 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு ஜூன் மாதம் 12ஆம் தேதியும் 1 முதல் 5ம் வகுப்புகளுக்கு ஜூன் மாதம் 14ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்