கட்டுமான தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு 50 ஆயிரம் கல்வி உதவித்தொகை
NEWS COVER
0
கட்டுமான தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு ஆண்டுக்கு 50 ஆயிரம் கல்வி உதவித்தொகை
GET NEWS COVER
அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் இந்திய தொழிற்பயிற்சி நிறுவனம் மற்றும் ஐஐஎம் போன்றவைகளில் சேரும் கட்டுமானத் தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் கல்வி உதவித் தொகையாக வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டுத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில் இதில் உறுப்பினர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் சி.வி.கணேசன்
அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்களில் புதிதாக 12 லட்சத்து66 ஆயிரத்து 126 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். 9 லட்சத்து 56 ஆயிரம் தொழிலாளர்களுக்கு ரூ.725 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என்றும்
மேலும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியங்களில் பதிவுபெற்ற தொழிலாளர்களுக்கு மூக்குக் கண்ணாடிக்கான உதவித்தொகை ரூ.500-லிருந்து 750 ரூபாயாக உயர்த்தப்படும் என்றும்
மேலும் அவர்களின் குழந்தைகள் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க 25 ஆயிரமும், சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்க ரூ.50 ஆயிரமும் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்றும்
மேலும் கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவுசெய்துள்ள தொழிலாளர்களின் பிள்ளைகள் தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் இந்திய தொழிற்பயிற்சி நிறுவனம் மற்றும் IIM போன்றவற்றில் சேரும்போது கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் மற்றும் வாழ்க்கைச் செலவு உட்பட ஆண்டுக்கு ரூ.50ஆயிரம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும் பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர் நல வாரியத்தில் பதிவுசெய்த தொழிலாளர்கள் விபத்தில் மரணம் அடைந்தால் வழங்கப்படும் உதவித் தொகை 1.25 லட்சத்திலிருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
Tags: தமிழக செய்திகள்