கட்டட முடிவு சான்று இல்லாமல் மின் இணைப்பு!! தமிழக அரசு அறிவிப்பு.
NEWS COVER
0
கட்டிட முடிவு சான்று பெறாமலே மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு பெறலாம்!! தமிழக அரசு அறிவிப்பு!
GET NEWS COVER
தமிழகத்தில் இனி கட்டிட முடிவு சான்று இல்லாமலே மின் இணைப்பு மற்றும் குடிநீர் இணைப்புகளை பெறலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் புதிய வீடுகள் கட்டும் போது மேற்படி கட்டிடங்களின் முடிவு சான்றை வழங்கிய பிறகே மின் இணைப்புகள் மற்றும் கழிவு நீர் இணைப்பு மற்றும் குடிநீர் இணைப்புகள் ஆகியவை வழங்கப்பட்டு வந்தன.
இந்த நடைமுறையால் இதுவரை மக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.இதனை பெறுவதில் அதிக காலதாமதமும் ஏற்பட்டு வந்தது.
இதனை கருத்தில் கொண்டு இனி கட்டிட முடிவு சான்று பெறாமலே மின் இணைப்பு, மற்றும் குடிநீர் இணைப்புகளை பெறலாம் எனவும் வீடுகள் கட்ட துவங்கும் முன்னரே கூட மின் இணைப்பு உள்ளிட்டவற்றை பெறலாம் என தமிழக அரசின் நகர்புற வளர்ச்சி துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்