Breaking News

இனி பிறப்பு சான்றிதழ் கட்டாயம்!! முழு விவரம்.

NEWS COVER
0
அரசு ஆவனங்களை பெற இனி பிறப்பு சான்றிதழ் கட்டாயம்!! அரசு அறிவிப்பு!! முழு விவரம் என்ன??

GET NEWS COVER

அரசின் அனைத்து ஆவணங்கள் மற்றும் சலுகைகளையும் பெற இனி பிறப்பு சான்றிதழ் கட்டாயம் என அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு பிறப்பு மற்றும் இறப்புகள் பதிவுச் சட்டம் 1969−ன் படி பிறப்பு மற்றும் இறப்பு பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன் படி அரசால் வழங்கப்படும் ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை,பாஸ்போர்ட்  உள்ளிட்டவற்றை பெறுவதற்கு அனைவரும் தங்களது பிறப்பு சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாக்கப்படுகிறது. 

இனி அரசின் அனைத்து சேவைகளையும் பெறவும் பிறப்பு சான்றிதழையும் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஒரு குழந்தை பிறந்து 21 நாட்களுக்குள் பெயருடன் பதிவு செய்து சம்மந்தப்பட்ட மருத்துவமனையில் பிறப்பு சான்றிதழ் பெற்றுக் கொள்ள வேண்டும்.

அதற்காக தற்போது ஆன்லைன் மூலம் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் பெற்றுக் கொள்ளும் வசதி நடைமுறையில் இருந்து வருகிறது. மேலும் பிறப்பு சான்றிதழை சமர்ப்பிக்கும் பொழுது 18 வயதாகும் போது தானாகவே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்துக் கொள்வதும், மேலும் ஒருவர் இறந்த பிறகு இறப்பு சான்றிதழை பதிவு செய்வதன் மூலம் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயரை நீக்கும் வசதியும் இனி நடைமுறையில் இருக்கும்.


Tags: தமிழக செய்திகள்