Breaking News

தமிழ் எழுத்தாளர்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு!! தமிழக அரசு அறிவிப்பு!!

NEWS COVER
0
தமிழ் எழுத்தாளர்கள் 10 பேருக்கு வீடுகள் ஒதுக்கீடு!!தமிழக அரசு அறிவிப்பு.
GET NEWS COVER

தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர்களான எஸ் ராமகிருஷ்ணன் உட்பட 10 எழுத்தாளர்களுக்கு "கனவு இல்லம்" திட்டத்தின் கீழ் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான "சாகித்ய அகாடமி" விருதுகள் "ஞானபீடம்" மற்றும் மாநில இலக்கிய விருதுகள் போன்ற உயரிய விருதுகளை பெற்ற தமிழ் எழுத்தாளர்களை கௌரவிக்கும் வகையில் அவர்களுக்கு அரசின் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

 அதன்படி 2002−23 ஆண்டுக்கான ஒதுக்கீட்டில் தமிழ் எழுத்தாளர்களான 

1. எஸ்.ராமகிருஷ்ணன்
2. சு.வெங்கடேசன் 
3. ஜி. திலகவதி 
4. பொன்.கோதண்டராமன் 
5. மறைமலை இலக்குவனார் 
6. முனைவர் ரா.கலைக்கோவன்
 7. பா.மருதநாயகம்
 8. கா.ராஜன் 
9. ஆர்.என்.ஜோ.டி.குரூஸ் 
10.சி. கல்யாணசுந்தரம்          (வண்ணதாசன்)

 ஆகிய 10 தமிழ் எழுத்தாளர்களுக்கும் தமிழக அரசு அவர்கள் வசிக்கும் மாவட்டத்திலோ அல்லது அவர்கள் விரும்பும் மாவட்டத்திலோ "கனவு இல்லம்" திட்ட வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

Tags: தமிழக செய்திகள்