ஒரே ஆதாரில் ஒன்றுக்கு மேற்பட்ட மின் இணைப்பு?? அதிகாரிகள் விளக்கம்.
NEWS COVER
0
ஒரே ஆதாரில் ஒன்றுக்கு மேற்பட்ட இணைப்பு!!?? மின்வாரிய அதிகாரிகள் விளக்கம்.
GET NEWS COVER
ஒரே ஆதார் எண்ணில் ஒன்றுக்கு மேற்பட்ட மின் இணைப்புகளை இணைப்பது குறித்து மின்வாரிய உயரதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
தமிழகத்தில் மின்நுகர்வோர் அனைவரும் தங்கள் ஆதார் எண்ணை தங்களது பெயரில் உள்ள மின் இணைப்புகளுடன் இணைப்பது தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போது அதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது.
நுகர்வோர்களுக்கு இது தொடர்பான குறுஞ்செய்திகளும் அனுப்பப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தற்போது ஒரே வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட மின் இணைப்பை வைத்திருப்பவர்கள் மற்றும் வீடுகளை கட்டி வாடகைக்கு விட்டிருப்பவர்கள் தங்களது ஆதார் எண்ணை அனைத்து இணைப்புகளிலும் இணைப்பது குறித்து விளக்கம் அளித்துள்ளனர்.
அதன்படி ஒரே வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட மின் இணைப்புகள் வைத்திருப்பவர்கள் மற்றும் வீடுகள் கட்டி வாடகைக்கு விட்டிருப்பவர்கள் தங்கள் பெயரில் உள்ள அனைத்து மின் இணைப்புகளுக்கும் தங்களது ஆதார் எண்ணையே இணைக்கலாம் என்றும் மேலும் வாடகைக்கு குடியிருப்பவர்கள் கூட தங்கள் குடியிருக்கும் வீட்டின் மின் இணைப்பில் தங்கள் ஆதார் எண்ணை இணைக்கலாம் என்றும் தகவல் தெரிவித்துள்ளனர்.
Tags: தமிழக செய்திகள்