சூறாவளி காற்றுடன் கனமழை!!வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!
NEWS COVER
0
சூறாவளி காற்றுடன் கனமழை!! சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!
GET NEWS COVER
வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் அநேக இடங்களில் நாளையும் (21.11.2022) நாளை மறுநாளும் (22.11.2022)கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் சுமார் 50 கிலோமீட்டருக்கு மேற்பட்ட வேகத்தில் சூறாவளி காற்று வீசவும் வாய்ப்புள்ளதாகவும் அப்போது சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் அனேக இடங்களில் லேசானது முதல் கனமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கடலூர் புதுச்சேரி காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே 21 மற்றும் 22 ஆம் தேதிகளில கன மழை முன்னெச்சரிக்கையை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய மீட்பு நடவடிக்கைகள் குறித்து அறிவிப்பு அனுப்பி இருந்தது.
மேலும் சென்னை உட்பட தமிழகத்தின் மாவட்டங்களில் கன மழையின் போது மீட்பு பணிகளுக்காக தேசிய பேரிடர் மேலாண்மை குழுவும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Tags: வானிலை செய்திகள்