Breaking News

மிரட்டும் கனமழை!! பேரிடர் மீட்புக்குழுக்கள் தயார்!! டிஜிபி தகவல்.

NEWS COVER
0
மிரட்டும் கனமழை!! 4 மாவட்டங்களில் பேரிடர் மீட்புக் குழுக்கள் தயார்!! டிஜிபி அறிவிப்பு.
GET NEWS COVER

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 2 நாட்களாக தீவிரம் அடைந்துள்ளது. 

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி திரு.சைலேந்திரபாபு தமிழகத்தில் பெய்து வரும் வடகிழக்கு பருவ மழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம் கடலூர், நாகப்பட்டினம் ஆகிய நான்கு மாவட்டங்களில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள பேரிடர் மீட்பு குழுக்கள் தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் கடற்கரைப் பகுதிகளில் வசிக்கும் தன்னார்வலர்கள் மற்றும் தமிழக தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையில் உள்ள நீச்சல் வீரர்கள் 60 பேர் படகுகள் மற்றும் மீட்பு சாதனங்களுடன் தயார் நிலையில் உள்ளதாகவும் மேலும் மழை காரணமாக ஏற்படும் சேதங்களுக்கு உடனடியாக உடனடியாக மீட்பு பணிகளை மேற்கொள்ளும் வகையில் அனைத்து மாவட்ட காவல் துறைகளுக்கும் உரிய உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக டிஜிபி திரு. சைலேந்திரபாபு தெரிவித்தார்.

Tags: தமிழக செய்திகள்