நவம்பர் 12-ல் ரேஷன் கார்டு குறைதீர் முகாம்!! அரசு அறிவிப்பு.
NEWS COVER
0
நவம்பர் 12-ல் ரேஷன் கார்டு குறைதீர் முகாம்!! தமிழக அரசு அறிவிப்பு.
GET NEWS COVER
தமிழகத்தில் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் மூலம் ஒவ்வொரு குடும்பத்துக்கும் தேவையான அத்தியாவசிய பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன.
அரசின் அனைத்து சேவைகளை பெறவும் ரேஷன் கார்டு கட்டாயமாகிறது. அப்படிப்பட்ட ரேஷன் கார்டுகளில் திருத்தங்கள் மேற்கொள்ளவும் புதிய ரேஷன் கார்டுகள் பெற விண்ணப்பங்கள் அளிக்கவும் ஒவ்வொரு மாதமும் அதற்கான தனியாக முகாம்கள் நடத்தப்படும் என ஏற்கனவே அரசு அறிவித்திருந்தது.
அதன்படி சென்னையில் வருகிற நவம்பர் 12ஆம் தேதி சனிக்கிழமை ரேஷன் கார்டு குறைதீர் முகாம்கள் நடைபெற உள்ளது. அந்தந்த பகுதி மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் இந்த ரேஷன் கார்டு குறைதீர் முகாம்கள் காலை 10 மணி முதல் பிற்பகல் 1மணி வரை நடைபெறும். மேற்படி முகாமில் ரேஷன் கார்டுகளில்,
பெயர் மாற்றம்,
பெயர் நீக்கம்,
பெயர் சேர்த்தல்,
முகவரி மாற்றம்,
செல்போன் எண் இணைப்பு
செல்போன் எண் மாற்றம்,
குடும்ப தலைவர் மாற்றம் மற்றும்
புதிய ரேஷன் கார்டுகள் விண்ணப்பிக்க விண்ணப்பம் அளித்தல்
போன்ற வேலைகளை பொதுமக்கள் செய்து கொள்ளலாம்.
இந்த குறைதீர் முகாம்களுக்கு வயது முதிர்ந்தவர்கள் நேரடியாக வர முடியாத பட்சத்தில் தங்கள் அங்கீகாரம் பெற்ற நபர் மூலம் மேற்படி மாற்றங்களை செய்து கொள்ளலாம் எனவும் அரசு அறிவித்துள்ளது. எனவே மேற்படி முகாம்களை மக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Tags: தமிழக செய்திகள்